தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் நலனுக்கான தெலங்கானா மண்டல அலுவலகம் வளாகம் மற்றும் பஞ்சாரா ஹில்ஸ் பிராந்திய அலுவலக வளாகத்தை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா நாளை ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ்ஸில் திறந்து வைக்கிறார்
Posted On:
05 MAR 2025 2:14PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா நாளை ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ்ஸில் உள்ள தெலங்கானா மண்டல அலுவலக வளாகத்தையும் பிராந்திய அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார். அத்துடன், குஜராத்தின் நரோடாவில் உள்ள மண்டல அலுவலகத்தையும் மெய்நிகர் மூலம் திறந்து வைக்கிறார். மேலும் ஹரியானாவின் குருகிராமில் பணியாளர் குடியிருப்புகளுக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி, அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், மாநில அரசு பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு சிறப்பாக சேவை செய்வதற்கான உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியாக இது உள்ளது .தொழிலாளர் நலன் மற்றும் நிர்வாக செயல்திறனை வலுப்படுத்துவதற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டையும் இது சுட்டிக் காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108372
***
TS/IR/RR/KR/DL
(Release ID: 2108563)
Visitor Counter : 14