வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அரசு மின்னணு சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு அஜய் பாதூ நியமிக்கப்பட்டுள்ளார்
Posted On:
05 MAR 2025 1:07PM by PIB Chennai
வர்த்தகத் துறை கூடுதல் செயலாளரான திரு அஜய் பாதூவை, அரசு மின்னணு சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2025 மார்ச் 3 அன்று மத்திய அரசு நியமித்துள்ளது. வர்த்தகத் துறையில் அவர் வகிக்கும் பொறுப்புகளுடன் கூடுதலாக இந்தப் பொறுப்பையும் அவர் கவனிப்பார்.
அரசு கொள்முதல் செய்வதற்கான நாட்டின் மிகப்பெரிய மின்னணு சந்தையான ஜிஇஎம் (GeM)-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை டிஜிட்டல் சந்தைக்கு தளம் மாறும்போது அவர் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அரசு மின்னணு சந்தையின் மொத்த வணிக மதிப்பு ரூ.4.58 லட்சம் கோடியாகும். இது ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 28.65% ஆண்டு வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
குஜராத்தின் 1999 பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான திரு பாதூ, நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளில் கொள்கை வகுத்தல் மற்றும் செயல்படுத்து வதில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
2024 ஆகஸ்ட் மாதத்தில், திரு பாதூ வர்த்தகத் துறையில் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். முன்னதாக, அவர் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் துணைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார். முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்தின் இணைச் செயலாளராகவும், குஜராத் கடல்சார் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மற்றும் ராஜ்கோட், வதோதரா நகராட்சி ஆணையர் போன்ற தலைமைப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
***
(Release ID: 2108344)
TS/IR/RR/KR
(Release ID: 2108433)