தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியா: ஒரு பறவைப் பார்வைக் காட்சிப் போட்டி
प्रविष्टि तिथि:
04 MAR 2025 5:09PM
|
Location:
PIB Chennai
வேவ்ஸ் இந்தியா: இந்தியாவில் படையுங்கள் போட்டிகளின் ஒரு பகுதியான பறவைப் பார்வைக் காட்சிப் போட்டியானது ட்ரோன் விமானிகள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களை வான்வழி ஒளிப்பதிவு மூலம் இந்தியாவின் அற்புதமான அழகையும் பன்முகத்தன்மையையும் படம்பிடிக்க அழைக்கிறது. பங்கேற்பாளர்கள் நாட்டின் நிலப்பரப்புகள், பாரம்பரியம் மற்றும் துடிப்பான வாழ்க்கையை ஒரு பறவையின் பார்வையில் இருந்து காண்பிக்கும் 2-3 நிமிட வீடியோவை உருவாக்கும் பணியை மேற்கொள்ளலாம். பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனமும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டிக்கு, பிப்ரவரி 15, 2025 நிலவரப்படி 956 பேர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.
போட்டி நடைபெறும் முறைகள்
பொது வகைமைகள்
வீடியோ எடிட்டர்கள், தொழில்முறை ட்ரோன் ஓட்டுநர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், குழுக்கள், மாணவர்கள், தனிநபர்கள்
ட்ரோன் சகோதரிகள்
மத்திய அரசின் ட்ரோன் சகோதரிகள் திட்டப் பயனாளிகள்
மையப்பொருள்கள்
இந்தியாவின் வளமான கலாச்சாரத்தை வெளிப்படுத்துதல்
இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தை எடுத்துரைத்தல்
இந்தியாவின் பன்மைத்துவத்தை கொண்டாடுதல்
இந்தியாவின் தனித்துவத்தை வலியுறுத்துதல்
பல்வேறு தளங்களில் முன்னணியில் இருக்கும் இந்தியாவைக் காட்சிப்படுத்துதல்
இந்தியாவின் நன்கு வளர்ச்சியடைந்த தொன்மை நாகரிகத்தை சித்தரித்தல்
நவீன, வளர்ச்சியடைந்த இந்தியாவை வழங்குதல்
பொதுமக்களிடம் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் புதியகண்டுபிடிப்பு முயற்சிகளின் சிறப்பம்சங்கள்
ட்ரோன் சகோதரி திட்டத்தின்கீழ் ட்ரோன்களின் பயன்களை வெளிப்படுத்துதல் அல்லது சமூகம் சார்ந்த மற்ற பிற சமூகப்பணி
இரண்டு வகைமைகளிலும் தரம் மற்றும் உள்ளடக்க அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு 10 வீடியோக்கள் தேர்வு செய்யப்படும்.
தலைசிறந்த அமைப்புகள் மற்றும் தொழில்துறை நிபுணர்களைக் கொண்ட நடுவர்குழு இறுதிப்போட்டியை நடத்தும்.
வெற்றியாளர்கள் மும்பையில் நடைபெறும் வேவ்ஸ் 2025 உச்சிமாநாட்டில் பாராட்டப்படுவார்கள்
இப்போதைக்கு இந்தப் போட்டி நமோ ட்ரோன் சகோதரிகள் வகைமைக்கு மாட்டுமே நடத்தப்படுகிறது வீடியோக்களை சமர்ப்பிக்க 2025, மார்ச் 15 கடைசி நாளாகும்
ஒவ்வொரு வகைமையிலும் முதலாவது, இரண்டாவது, முன்றாவது என மூன்று நிலைகளில் பரிசுகள் வழங்கப்படும்
இரண்டு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்
ஒவ்வொரு வகைமையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வீடியோக்களுக்கும் டிஜிட்டல் முறையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108107
***
TS/SMB/DL
रिलीज़ आईडी:
2108191
| Visitor Counter:
50