பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
மேற்குவங்கத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.699 கோடி மதிப்பிலான மானியங்களை 15வது நிதி ஆணையம் விடுவித்துள்ளது
Posted On:
03 MAR 2025 5:38PM by PIB Chennai
மேற்கு வங்கத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒருங்கிணைந்த மானியங்களின் இரண்டாவது தவணையான ரூ.694.44 கோடியையும், முதலாவது தவணையின் நிறுத்திவைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மானியங்களுக்கான நிலுவை ரூ.4.93 கோடியையும், 2024 25ஆம் நிதியாண்டு காலத்திற்கு 15வது நிதி ஆணையத்தின் மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதி தகுதி வாய்ந்த 21 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 326 ஊராட்சி ஒன்றியங்கள்,3220 கிராம பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியங்களை விடுவிக்க மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஜல்சக்தி அமைச்சகம் (குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை) மூலம் 15வது நிதி ஆணையம் பரிந்துரை செய்கிறது. பின்னர் இந்த நிதி நிதியமைச்சகத்தால் விடுவிக்கப்படுகிறது. நிதியாண்டில் இரண்டு தவணைகளில் ஒதுக்கப்பட்ட மானியங்கள் விடுவிக்கப்படுகின்றன. ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தை மேம்படுத்தி பொறுப்புத் தன்மையை விரிவாக்குவதோடு, கிராமங்களில் தற்சார்பை ஊக்குவிக்கவும் இந்த நிதி உதவுகிறது.
-----
TS/SMB/LDN/DL
(Release ID: 2107833)
Visitor Counter : 13