பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் ஆஸ்திரேலியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம்

Posted On: 03 MAR 2025 8:29AM by PIB Chennai

முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் 2025 மார்ச் 4 முதல் 7 வரை ஆஸ்திரேலியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இப்பயணம் இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பில் வலுவான உறவைப் பிரதிபலிக்கிறது. தமது பயணத்தின்போது அவர், ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகள், ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் தலைமை தளபதி ஜெனரல் அட்மிரல் டேவிட் ஜான்ஸ்டன், பாதுகாப்புத் துறை செயலாளர் திரு. கிரெக் மோரியார்டி மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோரை சந்தித்து விரிவான பேச்சுக்கள் நடத்த உள்ளார்.

ஆஸ்திரேலிய ராணுவ தலைமையகத்திற்கு செல்லும் முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் ஆஸ்திரேலியாவின் ராணுவ செயல் நடவடிக்கைகளை  அறிந்துகொண்டு கூட்டு நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்க உள்ளார். ஜெனரல் சவுகான் ஆஸ்திரேலிய கடற்படைத் தளபதி மற்றும் கூட்டு நடவடிக்கைத் தளபதியுடனும் உரையாட உள்ளார். தொழில்முறை ராணுவப் பயிற்சி மற்றும் கல்விக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மேம்படுத்தும் வகையில், முப்படைத்தளபதி, ஆஸ்திரேலிய ராணுவ கல்லூரிக்குச் சென்று பார்வையிட உள்ளார். அங்கு அவர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சவால்கள் குறித்து உயர் அதிகாரிகளிடம் விவாதிக்க உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107630

***

TS/IR/RR


(Release ID: 2107654) Visitor Counter : 20