பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் இஎஸ்ஜி தலைமைத்துவத்தை வலுப்படுத்த இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (IICA) கோவாவில் கூட்டத்தை நடத்தியது

Posted On: 02 MAR 2025 12:38PM by PIB Chennai

 

மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (IICA), கோவாவில், தாக்கத்தை ஏற்படுத்தும் தேசிய பிரதிநிதிகள் சங்கத்தின் (NAIL) கூட்டம் 2025-ஐ நடத்தியது. 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த மைல்கல் நிகழ்வு, புகழ்பெற்ற (ESG - Environmental, social and governance), சுற்றுச் சூழல், சமூக, நிர்வாக (இஎஸ்ஜி) வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனைத் தலைவர்களின் சங்கமமாக அமைந்தது.

இவர்கள், நுண்ணறிவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், வளர்ந்து வரும் நிலைத்தன்மை போக்குகள் குறித்து விவாதிப்பதற்கும்,  பொறுப்பான கார்ப்பரேட் எதிர்காலத்திற்கான போக்கை வகுப்பதற்கும் இணைந்து ஆலோசனை நடத்தினர். தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் (என்எஃப்ஆர்ஏ) தலைவரும், ஐஐசிஏ-வின் தலைமை இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு அஜய் பூஷண் பிரசாத் பாண்டேவின் மதிப்புமிக்க வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அறிவார்ந்த, உற்சாகமூட்டும் சொற்பொழிவுக்கு களம் அமைக்கும் வகையில், ஐஐசிஏ-வின் வணிக சூழல் பள்ளியின் இணை பேராசிரியரும் தலைவருமான பேராசிரியர் கரிமா தாதிச் தலைமையில் வரவேற்பு அமர்வுடன் நிகழ்வு தொடங்கியது. கார்ப்பரேட் நிலைத்தன்மையை வளர்ப்பதில் இஎஸ்ஜி தலைமையின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை அவர் தெளிவாக வெளிப்படுத்தினார். வளர்ந்து வரும் உலகளாவிய கட்டமைப்புகளுடன் நிறுவன உத்திகளை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

இன்போசிஸ் லிமிடெட்டின் துணைத் தலைவர் திருமதி அருணா சி. நியூட்டன், வலுவான நிர்வாக கட்டமைப்புகள் எவ்வாறு பசுமை தொழில்நுட்ப தத்தெடுப்பை துரிதப்படுத்த முடியும் என்பது குறித்து உரையாற்றினார்.

***

PLM/KV

 


(Release ID: 2107536) Visitor Counter : 37


Read this release in: English , Urdu , Hindi , Marathi