பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளுக்குத் திறன் மேம்பாடு குறித்த தேசிய பயிலரங்கம் - மார்ச் 4-ம் தேதி நடத்துகிறது பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் : மத்திய அமைச்சர்கள் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், திருமதி அன்னபூர்ணா பங்கேற்கின்றனர்
Posted On:
02 MAR 2025 1:24PM by PIB Chennai
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் தேசிய பயிலரங்கை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதில் "சஷக்த் பஞ்சாயத்து-நேத்ரி அபியான்" (சஷக்த் பஞ்சாயத்து-நேத்ரி அபியான்) 2025 மார்ச் 4 அன்று தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மத்திய மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சுஷில் குமார் லோஹானி, பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் அதிகாரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
சஷக்த் பஞ்சாயத்து-நேத்ரி அபியான் (சஷக்த் பஞ்சாயத்து-நேத்ரி அபியான்) என்பது நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கான திறன் வளர்ப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இது அவர்களின் தலைமைத்துவ ஆற்றலைக் கூர்மைப்படுத்துதல், அவர்களின் முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்துதல், நிர்வாகத்தில் அவர்களின் பங்கை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் முக்கிய பங்கை அங்கீகரித்து, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அவர்களின் தலைமையை மேம்படுத்தவும், முடிவெடுப்பதில் அவர்களின் தீவிர பங்கேற்பை உறுதி செய்யவும் ஒரு உத்திசார் திட்டத்தை வகுத்துள்ளது. சர்வதேச மகளிர் தினம் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் முதல் முறையாக, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் மூன்று அடுக்குகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள், செயல் சார்ந்த உரையாடலில் ஈடுபட, இந்த தேசிய தளத்தில் கூடுகின்றனர். பல்வேறு பின்னணிகளிலிருந்து 1,200-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து பெண் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில். பங்கேற்க உள்ளனர்.
***
PLM/KV
(Release ID: 2107534)
Visitor Counter : 74