கலாசாரத்துறை அமைச்சகம்
கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பிரையன் கிரீன், நாசா முன்னாள் விண்வெளி வீரர் மைக் மாசிமினோ ஆகியோர் கல்வி, ஆராய்ச்சியில் இந்தியாவின் அணுகுமுறைகளுக்குப் பாராட்டு
प्रविष्टि तिथि:
02 MAR 2025 9:44AM by PIB Chennai
"கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பிரையன் கிரீன் தாஜ்மஹாலுக்கு விஜயம் செய்தார். கல்வி, அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவின் தனித்துவமான அணுகுமுறையைப் பாராட்டிய அவர், உலகளாவிய சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த இந்திய மாணவர்களால் முடியும் என்றார்.
நாசா முன்னாள் விண்வெளி வீரர் மைக் மாசிமினோவும் தாஜ்மஹாலைப் பார்வையிட்டார். இந்தியாவின் அழகியல் ஈர்ப்பை எடுத்துரைத்த அவர், தாஜ்மஹாலின் தனித்துவமான கைவினைத்திறனைப் பாராட்டினார். பொறியியல், வடிவமைப்பில் இந்தியாவின் வளமான பாரம்பரியத்திற்கு இது ஒரு சான்று என்று அவர் கூறினார்.
டாக்டர் பிரையன் கிரீன், மைக் மாசிமினோ ஆகியோர் தற்போது இந்தியாவுக்கு வருகை தந்து, நாட்டின் வளமான அறிவியல், கல்வி, கலாச்சார பாரம்பரியத்தில் மூழ்கியுள்ளனர். தங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தனர். அறிவியல், பொறியியல் கைவினைத்திறன் ஆகியவற்றில் இந்தியாவின் சிறப்புக்காபகத் தங்கள் பாராட்டுகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
***
PLM/KV
(रिलीज़ आईडी: 2107496)
आगंतुक पटल : 50