வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தின் கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 88-வது கூட்டத்தில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து ஆய்வு

Posted On: 01 MAR 2025 11:29AM by PIB Chennai

 

சாலை, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் உள்கட்டமைப்பு திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக தொழில் - உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளர் திரு இ. ஸ்ரீனிவாஸ் தலைமையில் கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 88-வது கூட்டம் நடைபெற்றது. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தில் (PMGS NMP) பல்நோக்கு போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவதில் இந்த கூட்டம் கவனம் செலுத்தியது.

11 திட்டங்கள் இதில் ஆய்வு செய்யப்பட்டன. 7- சாலைத் திட்டங்கள், 2- ரயில்வே திட்டங்கள், 1- தகவல் தொழில்நுட்பத் திட்டம், 1- மெட்ரோ திட்டம் குறித்து கூட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டது. என்பிஜி (NPG) எனப்படும் கட்டமைப்பு திட்டமிடல் குழு, ஒருங்கிணைந்த பல்வகை உள்கட்டமைப்பு, கடைசி மைல் இணைப்பு, இடைநிலை ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மதிப்பீடு செய்தது. இந்த திட்டங்கள் போக்குவரத்து செயல்திறனை அதிகரிக்கும், பயண நேரங்களைக் குறைக்கும். இதனால்  சம்பந்தப்பட்ட பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார நன்மைகளை இவை வழங்கும்.

சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் செயல்படுத்தும் கிஷன்கஞ்ச் - பஹதூர்கஞ்ச் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், சங்கரெட்டி மாவட்டத்தில் கிர்மாபூர் கிராமத்திலிருந்து - சவுட்டுப்பல் (தேசிய நெடுஞ்சாலை-65-ல்) வரையிலான பசுமை விரைவுச் சாலை திட்டம், சிர்ஹிந்த் - சேஹ்னா பிரிவை மேம்படுத்தும் திட்டம், விசாகப்பட்டினம் துறைமுக சாலையுடன் ஆறு வழி இணைப்பு, ஜெய்ப்பூர் வடக்கு வட்டச் சாலை, லிம்பாடி முதல் திரங்கத்ரா வரை இருவழித்தடமாக தரம் உயர்த்துதல், 6 வழி ஜிராக்பூர் புறவழிச்சாலை ஆகிய திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

ரயில்வே அமைச்சகம் செயல்படுத்தும் பாகல்பூரிலிருந்து ஜமால்பூர் வரையாலான புதிய அகல ரயில் பாதை திட்டம், அவுரங்காபாத்-பர்பானி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டைப் பாதை திட்டம் ஆகியவையும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன.

மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய அறிவுத்திறன் கட்டமைப்பின் இரண்டாம் கட்ட திட்டம் குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டது.

வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தும் கிப்ட் சிட்டி மெட்ரோ வழித்தட திட்டம் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

***

PLM/KV

 


(Release ID: 2107196)
Read this release in: English , Urdu , Marathi , Hindi