தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அறங்காவலர் வாரியக் கூட்டம் – மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்

Posted On: 28 FEB 2025 3:23PM by PIB Chennai

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் வாரியத்தின் 237-வது கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார். இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே, மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா, உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

2024-25-ம் நிதியாண்டில் உறுப்பினர்களின் கணக்குகளில் உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.25% வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்க இக்கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. வட்டி விகிதம் மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து இபிஎஃப்ஓ அமைப்பானது வட்டி விகிதத்தை சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கும்.

இபிஎஃப்ஓ-வின் வருடாந்திர வரவு செலவு திட்டத்திற்கும் இந்த அமைப்பால் நிர்வகிக்கப்படும் மற்ற திட்டங்களுக்கும் 2024-25-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளுக்கும் வாரியம் ஒப்புதல் அளித்தது.

***

 TS/PLM/RJ/KV    


(Release ID: 2106993) Visitor Counter : 85