சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு உதவி உபகரணங்கள் உற்பத்தி – வடகிழக்குப் பகுதியில் முதலாவதாக திரிபுராவில் துணை உற்பத்தி மையத்தை அலிம்கோ நிறுவனம் அமைக்கிறது

प्रविष्टि तिथि: 28 FEB 2025 2:11PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் மூத்த குடிமக்களுக்குமான சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான இந்திய செயற்கை கால்கள் உற்பத்திக் கழகம் (அலிம்கோ) தனது முதல் துணை உற்பத்தி மையத்தை திரிபுராவின் செபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள புர்பா லக்ஷ்மிபில்லில் நிறுவ உள்ளது.

ரூ.45 கோடி முதலீட்டுடன், இந்த மையம் வடகிழக்கு பிராந்தியத்தில் உதவி உபகரணங்கள் உற்பத்தியைத் தொடங்கவுள்ளது.  வடகிழக்குப் பகுதிகளில் இந்த சாதனங்களின் தேவைகளை இந்த மையம் பூர்த்தி செய்யும். அத்துடன் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.

இந்த உற்பத்தி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (2025 மார்ச் 1) திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சர் திரு பி.எல்.வர்மா ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

***

(Release ID: 2106882)

TS/PLM/RJ/KR


(रिलीज़ आईडी: 2106911) आगंतुक पटल : 58
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR