மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சிஎஸ்சி ஒலிம்பியாட் 5.0 சாதனை அளவை எட்டியுள்ளது; இதில் போட்டியிட்ட 280,000 மாணவர்களில் 163 மாணவர்கள் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டு முடிவுகள் நாளை வெளியிடப்படும்
प्रविष्टि तिथि:
27 FEB 2025 3:05PM by PIB Chennai
சிஎஸ்சி ஒலிம்பியாட் 5.0-ல் தொலைதூர கிராமப்புறங்களைச் சேர்ந்த 280,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 15 பாடங்களில் பதிவு செய்திருந்தனர். இது நாட்டின் நகர்ப்புற, கிராமப்புற இடையிலான கல்வி இடைவெளியைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சியை எடுத்துக்காட்டுகிறது. பதிவு செய்யப்பட்டவர்களில், 113,576 மாணவர்கள் பயிற்சித் தேர்வுகளில் பங்கேற்றனர். 100,000-க்கும் மேற்பட்ட ஆன்லைன் தேர்வுகள் செயற்கை நுண்ணறிவு உதவியால் நடத்தப்பட்டன. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது சேவை மையம் அறிவித்தபடி, செயல்திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 163 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சி.எஸ்.சி ஒலிம்பியாட் 5.0 தேர்வு இந்தி, ஆங்கிலம், தமிழ், மராத்தி, குஜராத்தி, ஒடியா, தெலுங்கு, மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட 10 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டது. கல்வி மதிப்பீடுகளுக்கு அப்பால் ஒலிம்பியாட் தேர்வானது தலைமைத்துவம் மற்றும் தகவல்தொடர்பு திறன்களை வளர்ப்பதையும், கிராமப்புற சமூகங்களில் முக்கியமான கல்வி வழங்குவோர்களாக பொது சேவை மையங்களின் பங்கை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிஎஸ்சி ஒலிம்பியாட் 5.0-க்கான முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நாளை வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2106597
***
TS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2106628)
आगंतुक पटल : 67