நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரித் தொழிலில் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலங்கள் குறித்த மக்கள் சந்திப்புக்கு நிலக்கரி அமைச்சகம் மும்பையில் நாளை ஏற்பாடு செய்துள்ளது
Posted On:
27 FEB 2025 9:40AM by PIB Chennai
நிலக்கரித் தொழிலில் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலங்கள் குறித்த மக்கள் சந்திப்புக்கு நிலக்கரி அமைச்சகம் மும்பையில் நாளை (28.02.2025) ஏற்பாடு செய்துள்ளது. மும்பை தாஜ்மஹால் பேலசில் நடைபெறும் இந்த நிகழ்வில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், கூடுதல் செயலாளர் திருமதி ரூபீந்தர் பிரார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முக்கியமான இந்த நிகழ்வில் துறை சம்பந்தப்பட்டவர்கள், தொழில் துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்பார்கள்.
இந்தத் துறையில் தொழில் ஒத்துழைப்பையும், முதலீடுகளுக்கான ஊக்கத்தையும் அதிகரிக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வுகளில் ஒன்றாக மும்பையில் நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பு இருக்கும். வெளிப்படைத்தன்மையையும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் உருவாக்க இத்தகைய முயற்சிகளை நிலக்கரி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
நிலக்கரி துறையில் தொழில்நுட்ப ரீதியான புதிய கண்டுபிடிப்புகள், நிலைத்தன்மைக்கான நடவடிக்கைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள் போன்றவை குறித்து விவாதிப்பது இந்த நிகழ்வின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106513
***
TS/SMB/RR
(Release ID: 2106545)
Visitor Counter : 21