உள்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, மகாராஷ்டிராவின் புனேவில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் (கட்டம் -2) 20 லட்சம் பயனாளிகளுக்கு ஒப்புதல் கடிதங்களை வழங்கினார்
Posted On:
22 FEB 2025 7:44PM by PIB Chennai
பிரதமரின் கிராம வீட்டு வசதி திட்டத்தின் (கட்டம்-2) கீழ் 20 லட்சம் பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களையும், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 10 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணையையும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவுத்துறை இணையமைச்சர் திரு. முரளிதர் மொஹோல், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர்கள் திரு. ஏக்நாத் ஷிண்டே, திரு. அஜித் பவார் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முதன்முறையாக பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் 20 லட்சம் வீடுகள் ஒதுக்கப்படுவதை இந்தியா காண உள்ளது என்று கூறினார். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் காரணமாக 20 லட்சம் பேருக்கு சொந்த வீடு என்ற கனவு நனவாகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வீட்டுடன், பயனாளிகளுக்கு கழிப்பறைகள், சூரிய சக்தி தகடுகள் மற்றும் விரைவில் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும் என்றும், பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் முதல்வர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் இது சாத்தியமானது என்றும் திரு ஷா கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையான வளர்ச்சியடைந்த நாடாகமாற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியையும், அவரது குடும்பத்தினருக்கு தங்குமிடம், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதையும் உறுதி செய்ய பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார்.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ், மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த வீடுகள் வளர்ச்சி குறித்த கனவுகளை நனவாக்குவதைக் குறிப்பதாக கூறிய திரு ஷா, எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்கான முதல் படியாக அவை செயல்படுகின்றன என்று கூறினார்.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையான வளர்ச்சியடைந்த நாடாக மாற்றவும், ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியையும், அவரது குடும்பத்தினருக்கு தங்குமிடம், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதையும் உறுதி செய்யவும் பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார்.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ், மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த வீடுகள் வளர்ச்சி குறித்த கனவுகளை நனவாக்குவதைக் குறிப்பதாக கூறிய திரு ஷா, எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்கான முதல் படியாக அவை செயல்படுகின்றன என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105552
*************
BR/KV
(Release ID: 2105633)
Visitor Counter : 9