நிலக்கரி அமைச்சகம்
எஸ்இசிஎல்-ன் டிப்கா மெகா திட்டத்தில் விரைவான நிலக்கரி ஏற்றுதல் முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது
Posted On:
22 FEB 2025 3:36PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கோல் இந்தியாவின் துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எஸ்இசிஎல்), ஃபர்ஸ்ட் மைல் கனெக்டிவிட்டி (எஃப்எம்சி) திட்டங்கள் மூலம் அதன் சுரங்கங்களிலிருந்து பாதுகாப்பான, நிலையான நிலக்கரி வெளியேற்றத்திற்கான முயற்சிகளை துரிதப்படுத்துகிறது.
ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, எஸ்இசிஎல்-ன், டிப்கா மெகா திட்டம், 21 பிப்ரவரி 2025 அன்று புதிதாக கட்டப்பட்ட ரேபிட் லோடிங் சிஸ்டம், சைலோஸ் 3, 4 ஆகியவற்றிலிருந்து முதல் நிலக்கரி ரேக்கை ஏற்றியதன் மூலம் வெற்றிகரமாக செயல்பாடுகளைத் தொடங்கியது. இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற திறமையான நிலக்கரி போக்குவரத்தை அதிகரிப்பதில் ஒரு முக்கிய படியாகும்.
புதிய டிப்கா சிஎச்பி-சிலோ எஃப்எம்சி திட்டம் ஆண்டுக்கு 25 மில்லியன் டன் நிலக்கரி வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இது அனுப்பும் திறனை கணிசமாக மேம்படுத்துகிறது.
எஃப்எம்சி ஒரு திறமையான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலக்கரி போக்குவரத்து முறையாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டிப்காவில் எஃப்எம்சி உள்கட்டமைப்பை செயல்படுத்துவது பல நன்மைகளைத் தருகிறது:
*மேம்பட்ட செயல்திறன், துல்லியமான ஏற்றுதல், ரேக்குகளில்.
*விரைவான ஏற்றுதல் நேரங்கள்.
*நிலக்கரியின் தரத்தை மேம்படுத்துதல், மாசுபாடு, இழப்புகளைக் குறைத்தல்.
*சாலைப் போக்குவரத்தைச் சார்ந்திருப்பது குறைகிறது. டீசல் செலவுகள் சேமிக்கப்படுகிறது, தூய்மையான சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கிறது.
***
PLM/DL
(Release ID: 2105491)