வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா- ஜப்பான் இடையேயான உறவு சகோதரத்துவம், ஜனநாயகம், கலாச்சாரம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் வேரூன்றி உள்ளது: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல்
Posted On:
21 FEB 2025 5:07PM by PIB Chennai
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட உத்திசார் கூட்டாண்மையை இந்தியாவும் ஜப்பானும் கொண்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டாண்மையானது சகோதரத்துவம், ஜனநாயகம், கலாச்சாரம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் ஆழமாக வேரூன்றி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் பொருளாதாரம் மற்றும் முதலீடு குறித்த கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஜப்பான் ஒரு முக்கிய பங்குதாரராக இருந்து வருகிறது என்றார். 2000-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜப்பானில் இருந்து கிடைத்த அந்நிய நேரடி முதலீடு 43 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளதாகவும், இது இந்தியாவின் ஐந்தாவது பெரிய வெளிநாட்டு முதலீட்டு ஆதாரமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
2011- ஆண்டில் இரு நாடுகளிடையே கையெழுத்தான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம், இருதரப்பு வர்த்தகத்தைக் கணிசமாக வலுப்படுத்தியுள்ளதாகவும், இந்தியாவில் 1,400-க்கும் மேற்பட்ட ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மும்பை-அகமதாபாத் இடையே இயக்கப்படவுள்ள புல்லட் ரயில் மற்றும் தில்லி, அகமதாபாத், பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்கள் உட்பட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சியில் ஜப்பானின் பங்களிப்பைப் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே ஷின்கான்சென் புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2105293
***
TS/GK/AG/DL
(Release ID: 2105364)
Visitor Counter : 14