தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தென்னாப்பிரிக்கா நாட்டின் தலைமையின் கீழ் முதலாவது ஜி20 வேலைவாய்ப்பு பணிக் குழுக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு
Posted On:
21 FEB 2025 4:22PM by PIB Chennai
தென்னாப்பிரிக்கா நாட்டின் தலைமையின் கீழ், முதலாவது ஜி20 வேலைவாய்ப்பு பணிக்குழு கூட்டம் அந்நாட்டில் உள்ள போர்ட் எலிசபெத்தில் 2025 பிப்ரவரி 21-ம் தேதி நிறைவடைந்தது. வேலைவாய்ப்பு பணிக்குழுவின் முன்னுரிமைகளாக (i) உள்ளடக்கிய வளர்ச்சி & இளையோருக்கு அதிகாரமளித்தல் மற்றும் (ii) சமூக பாதுகாப்பு & டிஜிட்டல்மயமாக்கல் ஆகியவை குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டன.
நான்கு நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், அழைப்பு விடுக்கப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, ஜி-20 அமைப்பின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். இதில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது. இதில், இந்தியாவில் அதிகரித்து வரும் சமூகப் பாதுகாப்பு, பணியாளர்கள் எண்ணிக்கை தொடர்பான தரவுகளின் அடிப்படையில் விவாதம் நடைபெற்றது. தொழிலாளர் நலனுக்காக இந்தியாவில் பயன்படுத்தப்படும் தேசிய பணியாளர் சேவை மற்றும் இ-ஷ்ராம் எனப்படும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இணையதளச் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105272
***
TS/SV/RJ/DL
(Release ID: 2105363)
Visitor Counter : 36