தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு சட்டம் 2023-ன் கீழ், ஒலிபரப்பு சேவை வழங்குவதற்கான அனுமதி தொடர்பான விதிமுறைகள் குறித்த பரிந்துரைகளை ட்ராய் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
21 FEB 2025 3:28PM by PIB Chennai
தொலைத்தொடர்பு சட்டம் 2023-ன் கீழ், ஒலிபரப்பு சேவை வழங்குவதற்கான அனுமதி தொடர்பான விதிமுறைகள் குறித்த பரிந்துரைகளை ட்ராய்.
பல்வேறு ஒலிபரப்பு சேவைகள், உரிமங்கள், அனுமதிகள், பதிவுகள் போன்ற விவகாரங்கள் தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒலிபரப்பு சேவைகளான தொலைக்காட்சி சேவைகள் டிடிஹெச் பண்பலை வானொலி மற்றும் சமூக வானொலி நிலையங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தந்திச் சட்டம் 1885-க்கு மாற்றாக தொலைத்தொடர்புச் சட்டம் 2023 நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சம் 2024-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், அங்கீகரிக்கப்பட்ட ஒலிபரப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து 2024-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி இந்த விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பெறும் வகையில் அதன் இணையதளத்தில் தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட சாதக மற்றும் எதிர்மறை கருத்துகள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக 2024-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதியன்று வெளிப்படையான விவாதம் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105251
***
TS/SV/RJ/KR/DL
(रिलीज़ आईडी: 2105358)
आगंतुक पटल : 70