ஊரக வளர்ச்சி அமைச்சகம்
சமத்துவத்தை ஏற்படுத்த ஆளுகையில் ஆண் -பெண் பாலினப் பங்கேற்பு மிக முக்கியமானது: குடியரசு துணைத்தலைவர் டாக்டர் ஜக்தீப் தன்கர்
Posted On:
21 FEB 2025 4:47PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஆப்பிரிக்க-ஆசிய கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் டாக்டர் ஜக்தீப் தன்கர், ஆட்சியில் ஆண் -பெண் பாலினப் பங்கேற்பு, சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான அடிப்படை என்று கூறினார். ஆட்சியில் பெண்களின் பங்களிப்பு என்பது அரசியலமைப்பு ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஒரே நாடாக இந்தியா உலகில் திகழ்வதாகக் குறிப்பிட்டார். கிராமம் மற்றும் நகராட்சியில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பஞ்சாயத்து அமைப்பு தொடங்கி அனைத்து மட்டங்களிலும் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு இந்திய அரசு முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைமுறை மூலம் லட்சக்கணக்கான பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். கிராமப் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு சவால்களை பெண்கள் எதிர்கொள்கின்றனர் என்றும், இந்திய அரசியலமைப்பில் தேர்தல் முறை பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது பல்வேறு ஜனநாயக நிறுவனங்களின் செயல்பாடுகளைச் சட்ட ரீதியாகக் கட்டமைத்துள்ளதுடன், பெண்களின் பங்கேற்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார்.
தனிநபர் இணைய பயன்பாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்கா, சீனாவை விட இந்தியா முன்னணியில் இருப்பதாகக் கூறினார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு நமது பொருளாதாரம் உலகளாவிய தர வரிசையில் இரட்டை இலக்கத்தில் மட்டுமே இருந்ததாகவும், தற்போது நாம் உலகின் ஐந்தாவது இடத்தில் இருக்கிறோம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பொருளாதார சக்தியாக மாறும் பாதையில் இந்தியா பயணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2105287
***
TS/GK/AG/KR/DL
(Release ID: 2105356)
Visitor Counter : 12