நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டது தொடர்பாக மகாராஷ்டிரா உட்பட நான்கு மாநிலங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது

Posted On: 21 FEB 2025 3:11PM by PIB Chennai

கடந்த 8-ம் தேதி ரிசர்வ் வங்கி முத்திரை மற்றும் இந்திய முத்திரை பொறிக்கப்பட்ட உயர்தர இந்திய ரூபாய் நோட்டு காகிதத்தை இறக்குமதி செய்தது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டம் மற்றும் கர்நாடகாவின் பெங்களூருவில் 2 பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட தாள்களைப் பயன்படுத்தி  கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்ட இரண்டு அச்சகங்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் மகாராஷ்டிரா, ஹரியானா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் பீகாரில்  நேற்று வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் 11 வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தினர்.  இதன் அடிப்படையில் மேலும் 7 கள்ள நோட்டுகள் அச்சிட்ட  உட்தொகுப்பு அமைப்புகள் கைப்பற்றப்பட்டன.

மும்பையின் விக்ரோலி பகுதியில் ரூ. 50, ரூ. 100 மதிப்புள்ள போலி ரூபாய் தயாரிப்பு இயந்திரங்கள்/கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2105246

***

TS/GK/AG/KR


(Release ID: 2105276) Visitor Counter : 40