பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுதப்படைகளுக்கு ரூ.697.35 கோடி மதிப்பில் பளு ஏற்றும் ட்ரக் வாகன கொள்முதலுக்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து

प्रविष्टि तिथि: 20 FEB 2025 2:54PM by PIB Chennai

கரடு முரடான சாலைகளில் ஆயுத தளவாடங்களை ஏற்றிக் கொண்டு செல்லும் வகையில் 1868 ட்ரக் வாகனங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. முப்படைகளுக்காக   ரூ.697.35 கோடி செலவில் இந்த வாகனங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் பாதுகாப்புத்துறைச் செயலர் திரு ஆர் கே சிங் முன்னிலையில் ஏஸ் லிமிடெட் மற்றும் ஜேசிபி இந்தியா லிமிடெட் நிறுவனங்களுடன்கையெழுத்தானது.

பாதுகாப்புப் படைகளின் செயல் திறனை மேம்படுத்தும் வகையில் ஆயுதங்களை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல ஏதுவாக இந்த வாகனங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

உள்நாட்டுத் தளவாட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதன் மூலம் நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் திறன் மேலும் அதிகரிக்கும். இதன் மூலம்  ஏராளமானவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

ஆயுதத்தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இத்தகைய நடவடிக்கைகள் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு, நவீனப்படுத்தும் வகையிலும் உள்நாட்டு தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த கொள்முதல் நடவடிக்கை அமைந்துள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104951

----

TS/SV/KPG/DL


(रिलीज़ आईडी: 2105082) आगंतुक पटल : 105
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi