ஜல்சக்தி அமைச்சகம்
நீர்வள அமைச்சர்கள் மாநாடு, சவால்களைப் பற்றி விவாதிப்பதோடு மட்டுமல்லாமல், தீர்வுகளைக் கண்டறிவதற்கான கூட்டு முயற்சிகளிலும் கவனம் செலுத்தியது: மத்திய அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல்
Posted On:
19 FEB 2025 6:42PM by PIB Chennai
ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்ற இரண்டாவது அகில இந்திய மாநில நீர்வள அமைச்சர்கள் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது. முக்கியமான நீர் மேலாண்மை பிரச்சனைகள் குறித்து விவாதிக்க முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. மாநாட்டின் இறுதி நாளான இன்று நீர் விநியோக சேவைகள், நீர்ப்பாசனம், பிற பயன்பாடுகள், தேவை மேலாண்மை மற்றும் நீர் பயன்பாட்டு திறன், மற்றும் ஒருங்கிணைந்த நதி மற்றும் கடலோர மேலாண்மை ஆகிய கருப்பொருள்களில் கவனம் செலுத்தியது. இந்த விவாதங்கள் இந்தியாவின் நீர் நிர்வாகத்தை மேம்படுத்துவதையும் நிலையான நீர்வள மேலாண்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க பரிந்துரைகளுக்கு வழிவகுத்தன. 2025 பிப்ரவரி 18-19 ஆகிய நாட்களில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு விழாவில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் பேசிய போது, இந்த மாநாடு சவால்களைப் பற்றி விவாதிப்பதோடு மட்டுமல்லாமல், தீர்வுகளைக் கண்டறிவதற்கான கூட்டு முயற்சிகளிலும் கவனம் செலுத்தியது என்று குறிப்பிட்டார். அறிவைப் பகிர்ந்து கொள்வதிலும், பிரச்சனைகளுக்கு நடைமுறை தீர்வுகளைக் கண்டறிவதிலும் இது போன்ற அமைப்புகளின் முக்கியத்துவத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
நுண்ணீர்ப்பாசனம் மூலம் பண்ணையில் பயன்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவது பரிந்துரைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104797
-----
IR/KPG/DL
(Release ID: 2104821)
Visitor Counter : 23