அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவும் நேபாளமும் புதிய ஒப்பந்தத்துடன் அறிவியல், தொழில்நுட்ப கூட்டாண்மையை வலுப்படுத்தியது
Posted On:
19 FEB 2025 3:03PM by PIB Chennai
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையேயான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டும் வகையில், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி ஆகியவற்றுக்கு இடையே 2025 பிப்ரவரி 18 அன்று புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம், சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குநரும் டி.எஸ்.ஐ.ஆர் செயலாளருமான டாக்டர் என். கலைச்செல்வி மற்றும் நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் திலீப் சுப்பா ஆகியோரிடையே கையெழுத்தாகி பரிமாறிக்கொள்ளப்பட்டது. இருதரப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு பரந்த கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104672
----
TS/IR/KPG/KR
(Release ID: 2104742)
Visitor Counter : 19