பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பானது மீஷோ, ஐஎஃப்சிஏ மற்றும் மகாத்மா காந்தி கிராமப்புற தொழில்மயமாக்கல் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது
Posted On:
19 FEB 2025 1:29PM by PIB Chennai
பழங்குடியின சமூகங்களுக்கான வாடிக்கையாளர் சில்லறை வர்த்தக நடைமுறையிலிருந்து வர்த்தக நிறுவனங்களுக்கான விற்பனை நடைமுறைக்கு மாறுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனமானது மீஷோ, இந்திய சமையல் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மகாத்மா காந்தி கிராமப்புற தொழில்மயமாக்கல் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து பழங்குடியின வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் செயல்படுவதென முடிவு செய்யப்பட்டது. 2025 பிப்ரவரி 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தலைநகர் தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில் நடைபெற்ற 'ஆடி திருவிழா' என்ற நிகழ்ச்சியின் போது பிப்ரவரி 18-ம் தேதி இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த அமைப்புகளிடையேகையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தம் வர்த்தக நிறுவனங்களுக்கிடையே பழங்குடியின தயாரிப்பு சந்தையை அதிகரிப்பதற்கு வகைசெய்கிறது.
மீஷோ நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், பழங்குடியின தயாரிப்புகளை அவர்களின் சமூக வர்த்தக தளத்தில் சேர்ப்பதற்கு வசதி செய்வதும், பழங்குடியின விநியோகஸ்தர்களுக்கான பயிற்சி அளிப்பது, திறன் மேம்பாடு போன்ற முயற்சிகளை மேற்கொள்வதாகும். அதேசமயம், இந்திய சமையல் சங்கங்களின் கூட்டமைப்பு தங்கள் தொழில்நுட்ப தளத்தின் மூலம் சமையல் வல்லுநர்கள், உணவு விடுதிகளின் விநியோகச் சங்கிலியுடன் நீண்டகால ஒத்துழைப்பை நிறுவ உதவிடும். மேலும், மகாத்மா காந்தி கிராமப்புற தொழில்மயமாக்கல் நிறுவனம், இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்புடன் இணைந்து, கைவினைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை நடத்துகிறது.
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 பிப்ரவரி 16, அன்று மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் திரு ஜுவல் ஓரம் முன்னிலையில் இந்த விழாவைத் தொடங்கி வைத்தார்.
***
(Release ID: 2104628)
TS/SV/AG/KR
(Release ID: 2104684)
Visitor Counter : 22