குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

கத்தார் நாட்டு மன்னருக்கு குடியரசுத் தலைவர் வரவேற்பு

Posted On: 18 FEB 2025 9:32PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பிப்ரவரி 18, 2025 அன்று கத்தார் நாட்டின் மன்னர் திரு ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை வரவேற்று, அவரைக் கௌரவிக்கும் வகையில் விருந்து அளித்தார்.

இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள திரு அல் தானியை வரவேற்ற குடியரசுத் தலைவர், கத்தார் நாட்டுடனான இருதரப்பு உறவுகள் பல நூற்றாண்டுகளாக வரலாற்று முக்கியத்துவம் கொண்டவையாக உள்ளன என்று கூறினார். இந்தியாவுடனான வர்த்தகம், கலாச்சாரம் ஆகியவற்றில் மேற்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக கத்தார், இருந்து வருகிறது.

இந்தியா - கத்தார்  நாடுகளிடையேயான ஒத்துழைப்பு பன்முக ஈடுபாடு, வலுவான நல்லுறவு, ஆகியவற்றைக் குறிப்பதாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். வர்த்தகம், முதலீடு, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கலாச்சாரம், எரிசக்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் இணைந்து செயல்படவுள்ளன. புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், புத்தொழில் ஆகிய துறைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

இந்தியா-கத்தார் நாடுகளிடையே 'பாதுகாப்பு ஒத்துழைப்பைமேலும் வலுப்படுத்துவதற்கான  வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

***

(Release ID: 2104525)

TS/SV/AG/KR


(Release ID: 2104658) Visitor Counter : 17