தேசிய மனித உரிமைகள் ஆணையம்
டேராடூனில் உள்ள இந்திராகாந்தி தேசிய வனக்கல்வி கழகத்தில் இந்திய வனப்பணி அதிகாரிகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பயிற்சியளித்தது
Posted On:
17 FEB 2025 5:09PM by PIB Chennai
டேராடூனில் உள்ள இந்திராகாந்தி தேசிய வனக்கல்வி கழகத்தில் இந்திய வனப்பணி அதிகாரிகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் அதிகாரிகளிடையே உரையாற்றிய தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி திரு வி. ராமசுப்பிரமணியன், நாட்டின் இயற்கைப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் இந்திய வனப்பணி அதிகாரிகளின் முக்கிய பங்கினை எடுத்துரைத்தார். தங்களின் கடமைகளை மிகச் சரியாக நிறைவேற்றுவதற்கு வனச்சட்டம், உருவாகும் சவால்கள், சட்டம்-கொள்கை-அமலாக்கம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய வரலாற்றுப்பூர்வ கருத்துகளை அறிந்து வைத்திருப்பது அவசியம் என்று அவர் கூறினார்.
இந்தப் பயிற்சி நிகழ்வில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைமைச் செயலாளர் திரு பரத்லால், மனித உரிமைகள் என்பது மிகவும் அடிப்படையானது என்றும், ஒவ்வொருவரின் உரிமைகளையும், குறிப்பாக விளிம்பு நிலை மக்களின் உரிமையைப் பாதுகாக்க இது அவசியம் என்றும் கூறினார். அரசியல் சட்டத்தின் 32-வது பிரிவு சாதி, மதம், பாலினம் என்ற பாகுபாடு இல்லாமல், சமமான உரிமைகளை உத்திரவாதப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104104
***
TS/SMB/RJ/KR
(Release ID: 2104138)
Visitor Counter : 34