பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆதி மகோற்சவம் - 2025 ஐத் தொடங்கி வைத்தார், குடியரசுத்தலைவர்

Posted On: 16 FEB 2025 7:58PM by PIB Chennai

பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின்  (ட்ரைஃபெட்)  முதன்மையான முயற்சியான ஆதி மகோற்சவம்-2025ஐ  குடியரசுத்தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் தொடங்கி வைத்தார். 2025 பிப்ரவரி 16 முதல் 24 வரை நடைபெறும் இந்த துடிப்பான திருவிழா, இந்தியாவின் வளமான பழங்குடி பாரம்பரியம், கலாச்சாரம், கலை, கைவினைப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் வர்த்தகத்தைக் கொண்டாடுகிறது. 

விழாவில் பேசிய குடியரசுத்தலைவர், பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதில் ஆதி மகோற்சவத்தின் முக்கியத்துவத்தை  வலியுறுத்தினார்.  “கடந்த 10 ஆண்டுகளில், பழங்குடியின சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பல பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  பழங்குடி சமூகம் முன்னேறும்போதுதான், நம் நாடும்  முன்னேறும். எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சியிலும் கல்வியின் பங்கு மிக முக்கியமானது. நாட்டில் உள்ள 470க்கும் மேற்பட்ட ஏகலைவ மாதிரி உறைவிடப் பள்ளிகள் மூலம் சுமார் 1.25 லட்சம் பழங்குடியினக் குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆதி மகோற்சவம் என்பது பழங்குடியினரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இத்தகைய திருவிழாக்கள் தொழில்முனைவோர், கைவினைஞர்கள் மற்றும் பழங்குடி சமூகத்தின் கலைஞர்கள் சந்தையுடன் இணைவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது”, என்று அவர் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஜுவல் ஓரம்,  இணை அமைச்சர் திரு துர்கா தாஸ் உகே மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103858

(Release ID: 2103858)


(Release ID: 2103988) Visitor Counter : 21


Read this release in: English , Urdu , Hindi