ஜவுளித்துறை அமைச்சகம்
பாரத் டெக்ஸ் 2025-ல் ஆடை அலங்கார கண்காட்சி
Posted On:
16 FEB 2025 12:37PM by PIB Chennai
மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கைத்தறி மேம்பாட்டு ஆணைய அலுவலகம், கைவினைத்திறனின் துடிப்பை உணரவும், பாரம்பரியத்தை கௌரவிக்கவும் "பிரீத்திங் த்ரெட்ஸ்" என்ற தலைப்பில் ஒரு ஆடை அலங்கார அணிவகுப்பு (பேஷன்) கண்காட்சி நிகழ்வை ஏற்பாடு செய்தது.
மும்பை வைஷாலி எஸ் கோச்சர், வைஷாலி எஸ் த்ரெட்ஸ்டோரீஸ் பிரைவேட் லிமிடெட், கைத்தறி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பாரத் டெக்ஸ் 2025-ன் ஒரு பகுதியாக பாரத் மண்டபத்தில் உள்ள ஆம்பிதியேட்டரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
கையால் நெய்த ஜவுளிகள் நாட்டின் செல்வமாகும். அவற்றை மிகவும் நவீன, உலகளாவிய வகையில் காட்சிப்படுத்துவது ஒரு சிறப்பாகும்.
இந்த ஆடை அலங்கார கண்காட்சியில் 5 வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கிராமங்களில் நெய்யப்பட்ட துணிகள் இருந்தன. மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் 20 மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கைத்தறித் துணியை உருவாக்குவதற்கு படைப்பாற்றலுடன் எவ்வளவு திறனும் கடின உழைப்பும் தேவைப்படுகிறது என்பதற்கும், அதே நேரத்தில் ஒரு கைவினைக் கலையை உலகளாவிய பிராண்டுகளில் ஒன்றாக உயர்த்துவது எப்படி என்பதற்கும் இந்த நிகழ்ச்சி சான்றாக இருந்தது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, இலங்கை, பங்களாதேஷ், குவைத், சிலி போன்ற வெளிநாடுகளில் இருந்து வாங்குபவர்கள் இதில் பங்கேற்றனர்.
***
PLM/KV
(Release ID: 2103788)
Visitor Counter : 43