பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின் ஆளுகைக்கான தேசிய விருதுகள் - விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு

Posted On: 15 FEB 2025 4:07PM by PIB Chennai

 

மின்-ஆளுகை 2025-க்கான தேசிய விருதுகளுக்கான பரிந்துரைகளை பதிவு செய்தல், விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் 2025 ஜனவரி 07 அன்று தொடங்கியது.

பின்வரும் பிரிவுகளில் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன:-

வகை (I) - டிஜிட்டல் மாற்றத்திற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசு செயல்முறையை மறுவடிவமைப்பு செய்தல். இந்த பிரிவில் நான்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

வகை (II) - மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்க செயற்கை நுண்ணறிவு, பிற புதிய யுக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் புத்தாக்கம் ஏற்படுத்துதல். இந்த பிரிவில் 3 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

வகை (III) - சைபர் பாதுகாப்பில் சிறந்த இ-கவ் நடைமுறைகள். இந்த பிரிவில் 3 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

வகை (IV) - முன்முயற்சிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சேவை வழங்கலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள். இந்த பிரிவில் நான்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

வகை (V) –  தேசிய விருது, மாநில / யூனியன் பிரதேசம் / மாவட்ட அளவில் வழங்கப்பட்ட விருதுகளின் நீட்டிப்பு. இந்த பிரிவில் 1 விருது வழங்கப்படும்.

வகை (VI) – மத்திய அமைச்சகங்கள் / மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மூலம் டிஜிட்டல் தளங்களில் தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் மாற்றம். இந்த பிரிவில் 1 விருது வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய தரவுகளையும் பல்வேறு முகமைகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, மின் ஆளுகை 2025- க்கான தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள், பரிந்துரைகளை  https://nceg.gov.in/ என்ற  இணையதளம் மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 15.02.2025 என ஏற்கெனவே இருந்தது இப்போது 28.02.2025 வரை (23:59 மணி) நீட்டிக்கப்பட்டுள்ளது.

***

PLM/KV

 


(Release ID: 2103559) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Marathi , Hindi