மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய கால்நடைப் பராமரிப்புத் துறையும் உலக கால்நடை பராமரிப்பு சுகாதார அமைப்பும் இணைந்து கால்நடை பராமரிப்புத் துறையில் பொது-தனியார் கூட்டு செயல்பாடுகள் குறித்த பயிலரங்கை நடத்தின
Posted On:
15 FEB 2025 1:14PM by PIB Chennai
மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம், விலங்குகள் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்புடன் இணைந்து, 2025 பிப்ரவரி 11 முதல் 13;வரை கால்நடை சேவைகளில் அரசு தனியார் கூட்டு பங்களிப்பு குறித்த பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியது. கால்நடை மருத்துவ சேவைகளை வலுப்படுத்துவதே இப்பயிலரங்கின் நோக்கமாகும்.
இந்த விவாதங்கள் இந்தியாவில் கால்நடை சேவைகளில் உள்ள முக்கியமான இடைவெளிகளை அரசு-தனியார் பங்களிப்பு மூலம் நிரப்புவதில் கவனம் செலுத்தின.
மாவட்ட அளவில் அங்கீகாரம் பெற்ற கால்நடை ஆய்வகங்கள் உட்பட கால்நடை மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. கட்டமைக்கப்பட்ட பயிற்சி, அறிவு பகிர்வு தளங்கள் மூலம் கால்நடை பணியாளர்களின் திறனை மேம்படுத்துவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. வலுவான தடுப்பூசி மதிப்பு சங்கிலியை உருவாக்குவதன் மூலம் கால்நடை தடுப்பூசி உற்பத்தியை வலுப்படுத்துவது குறித்தும் இதில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கால்நடை ஆராய்ச்சி, நோய் கண்டறிதல், விரிவாக்கப் பணிகளில் தனியார் துறையின் நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்க விரிவான கொள்கை கட்டமைப்பை வரையறுத்தல் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
இந்தியாவின் வேளாண் துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு ஆதரவளிப்பதில் அரசின் உறுதியை கால்நடை துறையின் செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா எடுத்துரைத்தார்.
உலக கால்நடை சுகாதார அமைப்பின் ஆசிய- பசிபிக் பிராந்திய பிரதிநிதி டாக்டர் ஹிரோபூமி குகிடா, கால்நடை சேவைகளில் இந்தியாவின் நிபுணத்துவம், அறிவு பகிர்வு, ஆய்வக ஒத்துழைப்பு ஆகியவை உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்குப் பங்களிக்கும் என்று குறிப்பிட்டார்.
***
PLM/KV
(Release ID: 2103506)
Visitor Counter : 42