பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகள் 2024 திட்டம்
Posted On:
14 FEB 2025 6:24PM by PIB Chennai
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகள், 2024-ன் கீழ் விண்ணப்பங்களை பதிவு செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் 2025 ஜனவரி 20 அன்று தொடங்கியது.
பின்வரும் பிரிவுகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன:-
வகை -1- 11 முன்னுரிமைத் துறை திட்டங்களின் கீழ் மாவட்டங்களின் முழுமையான மேம்பாடு. இந்தப் பிரிவில், 5 விருதுகள் வழங்கப்படும்
வகை 2 - லட்சியத் தொகுதிகள் திட்டம். இந்தப் பிரிவில், 5 விருதுகள் வழங்கப்படும்
வகை 3: மத்திய அமைச்சகங்கள்/துறைகள், மாநிலங்கள், மாவட்டங்களுக்கான புத்தாக்கம். இந்தப் பிரிவில், 6 விருதுகள் வழங்கப்படும்
விண்ணப்பதாரர்கள் தரவுகளைப் பதிவேற்ற வேண்டிய தேவையையும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகளுக்காக இணைய தளத்தில் (www.pmawards.gov.in) பதிவு செய்வதற்கும், பரிந்துரைகளை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கும் கடைசி தேதி 14.02.2025-லிருந்து 21.02.2025 (23:59 மணி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
***
TS/PKV/AG/DL
(Release ID: 2103353)
Visitor Counter : 26