பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஜமைக்கா தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சகச் செயலாளருடன் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் சந்திப்பு
Posted On:
14 FEB 2025 12:15PM by PIB Chennai
அமெரிக்காவில் நியூயார்க்கில் நடைபெற்ற சமூக மேம்பாட்டு ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர், ஜமைக்காவின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிரந்தரச் செயலாளர் திருமதி டியோன் ஜென்னிங்சை சந்தித்தார். இருதரப்பு உயர்மட்டக் குழுவினரின் கலந்துரையாடல் நிகழ்வில் இருவரும் பங்கேற்றனர்.
இந்தியா – ஜமைக்கா இடையே சமூகப் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தும் வகையில், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஒத்துழைப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் நிதி, நேரடி மானியம், முதியோர் ஓய்வூதியம் போன்ற துறைகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு டிஜிட்டல் பயன்பாடுகள் மற்றும் வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஊட்டச்சத்து விளைவுகளை கண்காணித்து மேம்படுத்துவதற்கான சமூக நலத் திட்டங்களில் திறமையான, வெளிப்படையான சேவைகள் வழங்குவதை உறுதி செய்ய மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103135
***
TS/GK/RR/DL
(Release ID: 2103326)