தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மஹா கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடலை தூய்மையான சூழலில் மேற்கொள்வதை துப்புரவுப் பணியாளர்கள் உறுதி செய்துள்ளனர்

Posted On: 13 FEB 2025 7:28PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவையொட்டி புனித நீராடும் பகுதி முழுவதும் தினமும் தூய்மைப்படுத்தப்படுகிறது. கடந்த புதன்கிழமை மஹி பூர்ணிமா தினத்தையொட்டி திரிவேணி சங்கமத்தில் 2 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இந்த நிகழ்வுக்குப் பின்னர் அந்தப் பகுதியில் பக்தர்கள் விட்டுச் சென்ற மலர்கள், துணிகள், பிரசாதம் உள்ளிட்ட திடக்கழிவுகளை தூய்மைபடுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொண்டது. மறுநாள் காலையில் புனித நதிக்கரைகள் முற்றிலும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து சிறப்பாக பணிகளை மேற்கொண்டனர்.

படித்துறைகள் மற்றும் மைதானங்களில் உள்ள திடக்கழிவுகளை அப்புறப்படுத்த சிறப்பு துப்புரவு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. கூடுதலாக, அப்பகுதியில் உள்ள அனைத்து பொது கழிப்பறைகளும்  தூய்மையாகப் பராமரிக்கப்பட்டன.  இதனால் கும்பமேளா நடைபெறும் பகுதி முழுவதும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக உள்ளூர் மக்களும், பக்தர்களும் மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102898

***

TS/GK/RR/KR


(Release ID: 2103235) Visitor Counter : 17