தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மகா கும்பமேளா 2025: அரசின் சிறப்பு முயற்சியின் கீழ் 600 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மூத்த குடிமக்கள் இதுவரை திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளார்கள்
Posted On:
13 FEB 2025 7:26PM by PIB Chennai
நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியின் கீழ், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 2,000 ஆதரவற்ற முதியோர்கள் புனித நீராட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 600 க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த புனித சடங்கில் கலந்து கொண்டுள்ளனர். இந்த முன்முயற்சி முதியோர்களுக்கு மரியாதையை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தில் சேவை மற்றும் நல்லிணக்கத்திற்கு ஒரு முன்மாதிரியாகவும் அமைகிறது.
உத்தரப்பிரதேசத்தின் சமூக நலத்துறை அமைச்சர் திரு அசீம் அருணின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக தியோரியா, பஹ்ரைச், அம்ரோஹா மற்றும் பிஜ்னோர் மாவட்டங்களில் உள்ள முதியோர் இல்லங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட முதியோர்கள் பிரயாக்ராஜுக்கு அழைத்து வரப்பட்டனர். முதன்முறையாக, 100 படுக்கைகள் கொண்ட ஆசிரமத்தின் சிறப்பு முகாமை மகா கும்பமேளாவில் சமூக நலத்துறை அமைத்துள்ளது. இந்த முகாமில் முதியோர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. 2025 மகா கும்பமேளாவில் அரசின் இந்த புதுமையான முயற்சி, ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு ஆன்மீக மற்றும் மன அமைதியை அளித்துள்ளது.
மகா கும்பமேளா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆசிரமத்தில் பிரத்யேக மருத்துவக் குழு 24 மணி நேரமும் செயல்படுகிறது, எந்த வயதிலான நபரும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதை இது உறுதிசெய்கிறது. இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் மூத்த குடிமக்களுக்கு ஆன்மீக மற்றும் உணர்வு சார்ந்த அமைதியை வழங்குவதில் நிர்வாகம் புதிய அளவுகோலை அமைத்துள்ளது. மகா கும்பமேளாவில் அரசின் இந்த சிறப்பு முயற்சி, முதியோர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, ஆளுகை என்பது வளர்ச்சி சார்ந்தது மட்டுமல்ல, சேவை மற்றும் மரியாதை பற்றியதும் கூட என்ற சக்திவாய்ந்த செய்தியையும் பறைசாற்றுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102895
***
RB/DL
(Release ID: 2102957)
Visitor Counter : 40