நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய தரநிலைகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்- மத்திய அரசு
Posted On:
13 FEB 2025 6:39PM by PIB Chennai
இந்திய தரநிலைகளை அமல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் செயலாளர் திருமதி நிதி கரே தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் தரநிலைகளை செயல்படுத்துதல் - தரக் கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் அதிக தயாரிப்புகளைக் கொண்டுவருதல் குறித்து அமைச்சகங்களுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.
78-வது சுதந்திர தினத்தன்று பிரதமர் ஆற்றிய உரையில், இந்திய தயாரிப்புகளை உலகச் சந்தையில் தனித்து நிற்கச் செய்வதற்காக இந்திய தரநிலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இதன்படி இந்திய தரநிலைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102873
***
TS/GK/AG/DL
(Release ID: 2102903)
Visitor Counter : 29