மக்களவை செயலகம்
ஹரியானாவின் 15வது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மக்களவைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்
Posted On:
13 FEB 2025 3:40PM by PIB Chennai
சண்டிகரில் உள்ள மாநில சட்டமன்ற வளாகத்தில், ஹரியானாவின் 15-வது சட்டமன்றத்திற்குப் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா நாளை (2025 பிப்ரவரி 14) தொடங்கி வைக்கிறார்.
ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி; ஹரியானா சட்டப் பேரவைத் தலைவர் திரு ஹர்விந்தர் கல்யாண்; சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு பூபிந்தர் சிங் ஹூடா; மாநில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
இரண்டு நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் ஹரியானா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பார்கள்:
திறமையான சட்டமன்ற உறுப்பினராகச் செயல்படுவது எப்படி, உறுப்பினர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் விளக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102734
***
(Release ID: 2102734)
TS/PKV/RR/KR
(Release ID: 2102788)
Visitor Counter : 24