சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது சிறு மற்றும் நடுத்தர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் திருத்தப்பட்ட அட்டவணை எம் அறிக்கையை (சிறந்த உற்பத்தி நடைமுறைகள் பிரிவு) செயல்படுத்துவதற்கான காலஅவகாசத்தை நிபந்தனையுடன் நீட்டித்துள்ளது
प्रविष्टि तिथि:
12 FEB 2025 4:23PM by PIB Chennai
சிறு மற்றும் நடுத்தர மருந்து உற்பத்தியாளர்கள் மருந்து உற்பத்திக்கான நடைமுறைகளை அடங்கிய திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை–எம்-ன் படி மேற்கொள்வதற்கான காலஅவகாசம் நிபந்தனையுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. 250 கோடி ரூபாய்க்கும் குறைவான விற்பனை கொண்ட நிறுவனங்கள் 2025-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மருந்து உற்பத்தி குறித்த நடைமுறைகள், திட்டமிடல் மற்றும் கருவிகள் தொடர்பான விவரங்கள், இந்த திருத்தியமைக்கப்பட்ட அட்டவணையின்படி சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற அறிவிக்கையை 2023-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி அன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மருந்து உற்பத்தி நிறுவனங்கள், 2 வகைகளாக பிரிக்கப்படுகின்றன. முதலாவதாக, 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான விற்பனை கொண்ட பெருநிறுவனங்கள் ஒரு வகையாகவும், 250 கோடி ரூபாய்க்கும் குறைவான விற்பனை கொண்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த காலஅவகாசம் பெருநிறுவனங்களுக்கு 6 மாதமாகவும், சிறு நிறுவனங்களுக்கு 12 மாதமாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102291
-----
TS/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2102475)
आगंतुक पटल : 88