பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இம்மாதம் 13-ம் தேதி நடைபெறவுள்ள அகிலஇந்திய ஓய்வூதிய மக்கள் மன்றத்திற்கு டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்குகிறார்
Posted On:
12 FEB 2025 5:20PM by PIB Chennai
மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நல அமைச்சகத்தின் சார்பில், மத்திய பணியாளர் பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் 12-வது அகில இந்திய ஓய்வூதிய மக்கள் மன்றம் புதுதில்லியில் இம்மாதம் 13-ம் தேதி நடைபெறுகிறது. 16 அமைச்சகங்கள், துறைகளில் நீண்டகாலமாக (120 நாட்களுக்கும் கூடுதலாக) தீர்க்கப்படாமல் உள்ள ஓய்வூதிய நிலுவைத் தொகை தொடர்பான வழக்குகளுக்கு மக்கள் மன்றத்தில் தீர்வு காணப்படும். இந்த மக்கள் மன்றத்தில் 16 துறைகள் மற்றும் அமைச்சகங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதில் மத்தியஅரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் நலனை உறுதி செய்யும் வகையில் இந்த ஓய்வூதிய மக்கள் மன்றத்திற்கு மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நல அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து ஓய்வூதிய மக்கள் மன்றத்தின் வாயிலாக 18,005 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் கீ்ழ் 71 சதவீத வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102354
***
SV/KPG/DL
(Release ID: 2102473)
Visitor Counter : 30