சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: பிரதமரின் தக்ஷ் திட்டத்தின் பலன்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
11 FEB 2025 1:51PM by PIB Chennai
பிரதமரின் திறன் மற்றும் திறமை மேம்பாடு திட்டம்(PM-Dsksh யோஜனா) கடந்த 2021-22 முதல் 2025-26 வரை ஐந்து ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
2023-24 ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தின் கீழ் 1,87,305 பேர் பயனடைந்துள்ளனர். குறுகிய கால பயிற்சி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மேம்பாடு ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இதற்காக 2024-25-ம் நிதியாண்டில் ரூ. 80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து பயனாளிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த செய்தித்தாள்களில் விளம்பரம் அளிக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் விவரங்கள் சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இந்தத் தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு பி.எல். வர்மா மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101663
***
TS/GK/RJ/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2101959)
வருகையாளர் எண்ணிக்கை : 54