நிதி அமைச்சகம்
பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களின் கீழ் தனிநபர்களைச் சேர்ப்பதற்காக சிறப்பு இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன
Posted On:
10 FEB 2025 6:24PM by PIB Chennai
வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்குவங்கி கணக்கு தொடங்கி சேவை செய்தல், பாதுகாப்பற்றவர்களைப் பாதுகாத்தல், நிதியளிக்கப்படாதவர்களுக்கு நிதியளித்தல் மற்றும் சேவை வழங்கப்படாத மற்றும் சேவை பெறாத பகுதிகளுக்கு சேவைகளை நீட்டிதல், பெண்கள் மீது அக்கறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு உலகளாவிய வங்கி சேவை அளிப்பதற்காக, 2014 ஆகஸ்ட் மாதத்தில் பிரதமரின் அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தை அரசு தொடங்கியது. இத்திட்டம் 14.08.2018-க்கு பிறகும் நீட்டிக்கப்பட்டது. மேலும் வங்கி வசதி "ஒவ்வொரு வீட்டிற்கும்" என்பதற்கு பதிலாக "வங்கி வசதி இல்லாத ஒவ்வொரு வயது வந்தோருக்கும்" என்பதில் கவனம் செலுத்தப்பட்டது. 15.01.2025 வரை மொத்தம் 54.58 கோடி மக்கள் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் 30.37 கோடி (55.7%) வங்கிக் கணக்குகள் பெண்களுக்குரியதாகும். பல்வேறு சமூகப் பாதுகாப்பு மற்றும் கடன் தொடர்புடைய திட்டங்களில் பெண்கள் பயன்பெறுவதற்கும் இந்த வங்கிக் கணக்கு திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் மூலம் நாட்டில் உள்ள பெண்கள், கிராமப்புற மக்கள், விளிம்புநிலைக் குழுக்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு அணுகலை உறுதி செய்வதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தனியார் வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் இந்தத் திட்டங்களின் செயல்திறனை உறுதி செய்வதற்கும், அனைத்து பங்குதாரர்களுக்கும் அவற்றை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும் இந்த நடவடிக்கைகளில் பங்கேற்கின்றன.
நாட்டில் நிதி சேர்க்கை திட்டங்களில் எதிர்கொள்ளும் குறைந்த சேர்க்கை, விழிப்புணர்வு இல்லாமை போன்ற சவால்களை நிவர்த்தி செய்வதற்காக, மாநில அதிகாரிகளுடன் இணைந்து அரசு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடைக்கோடி பயனாளிகளை சென்றடைய, கிராம பஞ்சாயத்து அளவில் அவ்வப்போது பல சிறப்பு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சாரங்கள் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் பிற நிதி சேர்க்கை திட்டங்களின் கீழ் தனிநபர்களைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மாநில அளவில் இந்தத் திட்டங்களின் கீழ் பயனாளிகளின் சேர்க்கையை அதிகரிக்க, வங்கிகள், அரசு நிறுவனங்கள், முன்னணி மாவட்ட மேலாளர்கள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தத் தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101428
***
TS/IR/RJ/DL
(Release ID: 2101496)
Visitor Counter : 26