பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏரோ இந்தியா 2025

Posted On: 09 FEB 2025 8:01PM by PIB Chennai

இந்தியக் கடற்படையானது 'தற்சார்பு' என்ற நோக்கத்தை முன்னெடுத்துள்ளது, இதில் 60-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் இந்திய கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்படுவதன் மூலம் வாங்குவோரின் கடற்படை என்ற நிலையில் இருந்து சொந்தக் கட்டுமானக் கடற்படையாக நம் கப்பல் படை மாறியுள்ளது. கடற்படையின் ஒருங்கிணைந்த அங்கமான இந்தியக் கடற்படை விமானப் போக்குவரத்தும் இந்தப் பாதையில் உறுதியாக உள்ளது. இந்தத் திசையில் ஒரு உறுதியான போக்கை வகுப்பதற்கு, 'தற்சார்பு  இந்திய கடற்படை விமானப் போக்குவரத்து – தொழில்நுட்ப செயல்திட்டம்  2047' என்ற தொலைநோக்குப் பார்வையிலான ஆவணம் தயாரிக்கப்பட்டு ஏரோ இந்தியா 2025 இன் போது வெளியிடப்பட உள்ளது.

பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் ஏரோ இந்தியா 2025 என்ற ஈராண்டுக்கு ஒரு முறை என்ற நிகழ்வானது பயனர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள், தொழில்துறை கூட்டாளர்கள், எம்.எஸ்.எம்.இ மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகிறது. இந்த நிகழ்வு கடற்படை விமானப் போக்குவரத்துக்கு அதன் எதிர்காலத் தேவைகளை முன்வைப்பதற்கும், எந்தவொரு கடற்படை விமான தளத்திற்கும் முக்கியமாகத் தேவைப்படும் அமைப்புகள், கட்டமைப்புகள் மற்றும் மென்பொருள் தொடர்பாக வழங்க வேண்டியவற்றை எடுத்துக்காட்டுவதற்கும் ஒரு தளத்தை வழங்குகிறது.

ஏரோ இந்தியா 2025 என்பது நிலையான கண்காட்சியின் ஒரு பகுதியாக தற்போது இந்தியக் கடற்படையால் இயக்கப்படும் பல்வேறு வகையான கடற்படை விமானங்களை பொது மக்களுக்கு காட்சிப்படுத்தவும் அறிமுகப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்படுகிறது. இதில் மிக் 29 கே 4 வது தலைமுறை கேரியர் போர் விமானம், காமோவ் 31 வான்வழி முன்கூட்டிய எச்சரிக்கை ஹெலிகாப்டர், சீக்கிங் 42 பி மற்றும் எம்.ஹெச் 60 ஆர் நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு ஹெலிகாப்டர்கள் ஆகியவை அடங்கும். கூடுதலாக, இந்தியக் கடற்படை இலகுரக போர் விமானங்களும்  கண்காட்சி பகுதியில் இடம் பெறும். இந்த விமானத்தை ஏரோநாட்டிகல் டிசைன் ஏஜென்சி (ஏ.டி.ஏ) வடிவமைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101182

***

TS/BR/RR


(Release ID: 2101229) Visitor Counter : 44


Read this release in: English , Urdu , Hindi , Kannada