சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பிரதமரின் பட்டியல் சமூக உதய திட்டம் குறித்த மத்திய ஆலோசனைக் குழுவிற்கு மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமை தாங்கினார்
Posted On:
08 FEB 2025 3:40PM by PIB Chennai
பிரதமரின் பட்டியல் சமூக உதய திட்டத்துக்கான (பிஎம்- அஜய்) மத்திய ஆலோசனைக் குழுவின் கூட்டம், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதிலும், இந்தியா முழுவதும் உள்ள பட்டியல் சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட உத்திகளை வகுப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது.
டாக்டர் வீரேந்திர குமார், திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முழுமையாக விவாதித்தார், மேலும் அட்டவனை சாதி மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் மற்றும் பயனாளிகளின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களை வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், தேசிய பட்டியல் சாதியினர் ஆணையத் தலைவர், மத்திய நிதி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், கிராமப்புற மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, நிதி ஆயோக் அமைச்சகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய ஆலோசனைக் குழுவின் பிற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைத்து உறுப்பினர்களும் எஸ்சி சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்படுத்தலைப் பாராட்டினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101001
***
PKV/KV
(Release ID: 2101022)
Visitor Counter : 31