மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
2025 ஜனவரியில் 284 கோடிக்கும் அதிகமான ஆதார் உறுதிப்படுத்தல்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
07 FEB 2025 5:08PM by PIB Chennai
2025 ஜனவரியில் ஆதார் வைத்திருப்பவர்கள் 284 கோடிக்கும் அதிகமான அங்கீகார பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானது இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான விரிவாக்கத்தையும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுகிறது.
2024 ஜனவரியில் 214.8 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதை விட, 2025 ஜனவரியில் அங்கீகார பரிவர்த்தனைகள் 32%-க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒன்பது கோடிக்கும் அதிகமான அங்கீகார சரிபார்த்தல்கள் நடைபெறுகின்றன. இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஆதாரின் வளர்ந்து வரும் ஏற்பு மற்றும் பயன்பாட்டைக் காட்டுகிறது. ஏறத்தாழ 550 நிறுவனங்கள் ஆதார் அங்கீகார சேவையைப் பயன்படுத்துகின்றன.
ஆதார் முக அங்கீகாரப் பரிவர்த்தனைகளும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜனவரியில், ஏறத்தாழ 12 கோடி ஆதார் முக அங்கீகாரப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. முக அங்கீகார பரிவர்த்தனை முதன்முதலில் 2021 அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, ஒட்டுமொத்தமாக 102 கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த 12 மாதங்களில் மட்டும் மொத்த முக அங்கீகார பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட 78 கோடி பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரியில் 43 கோடிக்கும் அதிகமான இ-கேஒய்சி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. 2025 ஜனவரி இறுதிக்குள், ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி பரிவர்த்தனைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2268 கோடியைத் தாண்டியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100685
***
TS/SMB/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2100829)
வருகையாளர் எண்ணிக்கை : 66