இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
உடல் பருமனைக் குறைக்க உடல் தகுதிக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தல்
Posted On:
07 FEB 2025 3:25PM by PIB Chennai
உடல் பருமனைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், உடல் தகுதியைப் பேணுவதற்கு தடகள வீரர்கள் உடற் பயிற்சி குறித்த விழிப்புணர்வைப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ள அவர், சத்தான உணவுகள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவை நமது நாட்டின் வாழ்க்கை முறையின் அங்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி வீரரான ஸ்ரீஜேஷ், கட்டுப்பாடான உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளதை மேற்கோள் காட்டியுள்ள பிரதமர், உடல் தகுதியைப் பேணுவதில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உணவு உட்கொள்ளும் போது உணவுப் பொருட்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு உண்ணும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டிய பிரதமர், ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளை, உண்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100620
-----
TS/SV/KPG/RR
(Release ID: 2100725)
Visitor Counter : 28