தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்மகத்தில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி உள்ளனர்
प्रविष्टि तिथि:
07 FEB 2025 4:20PM by PIB Chennai
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்மத்தில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 42 கோடியைக் கடந்துள்ளது. இன்னும் 19 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 50 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகர சங்கராந்தி, மௌனி அமாவசை மற்றும் பசந்த் பஞ்சமி ஆகிய 3 முக்கிய நாட்களில் நீராடிய பின்னரும், பக்தர்களின் உற்சாகம் குறையாமல் இருப்பதை இது பிரதிபலிக்கிறது. நாடு முழுவதிலும் இருந்தும் உலக நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு பிராக்ராஜ் வருகின்றனர்.
மௌனி அமாவாசை அன்று மட்டும் 8 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உட்பட பல தலைவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இம்மாதம் 10-ம் தேதி திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100656
-----
TS/SV/KPG/RR
(रिलीज़ आईडी: 2100723)
आगंतुक पटल : 78