குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நிதி விவேகமும் சிக்கனமும் செயல்பாட்டுத் திறனை ஒருபோதும் பாதிக்கக்கூடாது என்று குடியரசு துணைத்தலைவர் அறிவுரை
प्रविष्टि तिथि:
06 FEB 2025 8:53PM by PIB Chennai
2022, 2023-ம் ஆண்டுகளின் இந்திய பாதுகாப்பு கணக்குப்பணி பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், நிதி விவேகமும் சிக்கனமும் செயல்பாட்டுத் திறனை ஒருபோதும் பாதித்துவிடக்கூடாது என்று கூறினார். நிதி நேர்மையில் ஒருமுறை சமரசம் செய்துகொண்டு விட்டால் அதை எப்போதும் மீட்க முடியாது. எனவே மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியோடும், திருப்தியோடும் இருப்பதற்கான வழிமுறையை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
உலகின் ஒட்டுமொத்த மனிதகுலத்தில் ஆறில் ஒருபகுதியினரைக் கொண்டுள்ள இந்தியாவில் சேவை செய்வது உங்களுக்கு கிடைத்துள்ள நல்வாய்ப்பாகும் என்று கூறிய திரு தன்கர், ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுடன் இவர்கள் தொடர்பு கொள்ள வேண்டி இருப்பதை சுட்டிக்காட்டினார். ஓய்வூதியதாரர்கள் குறித்த முழுமையான புரிந்துணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ஓய்வூதியம் வழங்குவதில் ஒருபோதும் பிரச்சனை இருக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உங்களின் பெற்றோர்களைப் போன்றவர்கள், அவர்களோடு கைகோர்த்துச் செல்லுங்கள். அவ்வாறு செய்யும் போது அவர்கள் உங்களை வார்த்தையால் ஆசிர்வதிப்பதோடு உங்கள் நினைவில் நிலைத்திருப்பார்கள் என்றும் திரு தன்கர் தெரிவித்தார்.
***
(Release ID: 2100484)
TS/SMB/AG/RR
(रिलीज़ आईडी: 2100679)
आगंतुक पटल : 76