சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குகள் - அண்மை நிலவரம்
Posted On:
07 FEB 2025 2:00PM by PIB Chennai
தேசிய டிஜிட்டல் சுகாதாரச் சூழல் அமைப்பை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இதில் மக்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக, 14 இலக்க தனித்துவமான சுகாதார அடையாள எண் (முன்னர் சுகாதார ஐடிகள் என்று அழைக்கப்பட்டது) ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு எண்களாக உருவாக்கப்படுகின்றன. 03.02.2025 நிலவரப்படி, 73,90,93,095 ஆயுஷ்மான் பாரத் அடையாள எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தகுதியுள்ள பயனாளிகளிடையே இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு விரிவான ஊடக மற்றும் மக்கள் தொடர்பு உத்தி பின்பற்றப்படுகிறது. இந்தத் திட்டம் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கான தகவல், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கைகளில் வெளிப்புற ஊடகங்கள், பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் டிஜிட்டல் காட்சி, முக்கிய பேருந்து நிலையங்களில் அறிவிப்புகள், பயணிகள் ரயில், தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகைச் செய்திகள், அச்சு ஊடகங்களில் தலையங்கங்கள் மற்றும் விளம்பரங்கள், வானொலி பிரச்சாரம், தூர்தர்ஷன் வழியாக பயன் பெற்றவர்களின் சான்றுகளை ஒளிபரப்புதல், குறுஞ்செய்தி மூலம் பொதுமக்களுக்கு செய்தி அனுப்புதல், பாரம்பரிய ஊடகங்கள் பயன்படுத்தல் ஆகியவை அடங்கும்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100596
***
TS/PKV/RJ/KR
(Release ID: 2100663)
Visitor Counter : 65