தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தேசிய தொலைபேசி எண்ணை மாற்றியமைக்கும் திட்டத்திற்கான பரிந்துரையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது
Posted On:
06 FEB 2025 4:12PM by PIB Chennai
தொலைபேசி எண்ணை மாற்றியமைப்பது தொடர்பான தேசிய திட்டத்திற்கான பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
தொலைபேசி பயனாளர்கள், சேவை வழங்குநர்கள், கட்டமைப்பு கூறுகள், சாதனங்கள் மற்றும் அங்கீகார நிறுவனம் ஆகியவை குறித்த தனித்துவ அடையாளத்தைப் பயன்படுத்தும் வகையில், தொலைத்தொடர்பு அடையாள குறியீடுகளின் அவசியத்தை இந்தப் பரிந்துரை குறிப்பிடுகிறது. தற்போது டிஜிட்டல் முறையிலான ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சேவைகள் மூலம் லட்சக்கணக்கான தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் பயனாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அனைவராலும் அணுகக் கூடிய வகையில் நம்பகத்தன்மையுடன் கூடிய தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் வகையில் இந்த தொலைப் பேசி எண்களுக்கான நடைமுறைகள் வகுக்கப்படும்.
நிலையான தொலைபேசி எண்களுக்கான ஆதார வளங்களை போதிய அளவு கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தொலைபேசி எண்ணை மாற்றியமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படும். நிலையான தொலைத்தொடர்பு வசதிக்கான எண்கள் திட்டத்தை ஆய்வு செய்யும் வகையிலும் ஆலோசனை வழங்கும் வகையிலும் பரிந்துரைகளை அளிக்குமாறு தொலைத்தொடர்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து தொலைபேசி எண்ணை மாற்றுவதற்கான தேசிய திட்டம் குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆணையத்தின் இணையதளத்தில் இந்தத் திருத்தம் தொடர்பான நேர்மறைக் கருத்துக்கள் மற்றும் எதிர்மறை கருத்துக்களைத் தெரிவிக்கும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம்தேதி நடைபெற்ற வெளிப்படையான ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100279
***
TS/SV/KPG/DL
(Release ID: 2100431)
Visitor Counter : 14