வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற திட்டமிடலுக்கு பெண்களின் பாலினச் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல்

Posted On: 06 FEB 2025 5:19PM by PIB Chennai

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA), ஜூன் 25, 2015 அன்று தொடங்கப்பட்ட அம்ருத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இது நிலையான நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அம்ருத் வழிகாட்டுதல்கள் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் திட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்து மேற்பார்வை, கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தல் போன்ற ஸ்மார்ட் கூறுகளை வழங்குகிறது.

தொழில்நுட்ப சார்பு இயக்கம் என்பது புத்தொழில் யோசனைகளையும் தனியார் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும், அவற்றை மாதிரி திட்டங்களில் சேர்ப்பதற்கும் அம்ருத் 2.0-வின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.

அம்ருத் 2.0-ன் கீழ், ஒப்பந்ததாரர்கள், பிளம்பர்கள், ஆலை இயந்திர இயக்குனர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள் நடத்தப்படுகின்றன.

நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் சிறந்து விளங்கும் 4 நிறுவனங்களை, குடிமைப் பணியாளர்கள், மாநில நகர திட்டமிடுபவர்கள், நகராட்சி அதிகாரிகள், பயிற்சியாளர்கள்/தொழில் வல்லுநர்கள், இளம் மாணவர்கள் போன்றோருக்கு சான்றளிக்கப்பட்ட பயிற்சிகள்/சான்றளிக்கப்பட்ட படிப்புகளை வழங்குவதற்காகப் பல்வேறு பிராந்தியங்களில், அமைச்சகம் நியமித்துள்ளது. இந்த மையங்களுக்கு தலா ரூ.250 கோடி மானிய நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை இணையமைச்சர் திரு. தோகன் சாஹு இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100340   

***

TS/PKV/AG/DL


(Release ID: 2100398) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi , Bengali