சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: பசுமைப் பரப்பளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
06 FEB 2025 3:38PM by PIB Chennai
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு காடுகளாக அல்லது மரங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் மற்றும் அந்த மொத்தப் பசுமை நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு குன்றுகள் மற்றும் மலைப்பகுதிகளில் இருக்க வேண்டும் என்ற தேசிய இலக்கைக் தேசிய வனக் கொள்கை 1988, கொண்டுள்ளது.
டேராடூனில் உள்ள இந்திய வன கணக்கெடுப்பு ஆய்வு வெளியிட்ட சமீபத்திய இந்திய வன நிலை அறிக்கை– 2023-இன் படி, நாட்டின் மொத்த மரங்கள் மற்றும் வனப்பகுதி 8,27,356.95 சதுர கிலோமீட்டர் ஆகும், இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.15% ஆகும். முந்தைய 2021 ஆம் ஆண்டின் மதிப்பீட்டு அறிக்கையுடன் ஒப்பிடும்போது நாட்டின் மரங்கள் மற்றும் வனப்பகுதி 1445.81 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளது.
காடுகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை என்பது முதன்மையாக மாநில அரசின் பொறுப்பாகும். நாட்டின் காடுகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை ஒழுங்குபடுத்தும் தேசிய மற்றும் மாநில மட்டங்களில் போதுமான சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை அரசு வகுத்துள்ளது. காடுகளின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய மத்திய அளவிலான கொள்கை மற்றும் சட்டங்களில் தேசிய வனக் கொள்கை, 1988, இந்திய வனச் சட்டம், 1927, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972, மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002 போன்றவை அடங்கும்.
இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100254
***
TS/PKV/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2100275)
வருகையாளர் எண்ணிக்கை : 111